2014 Chithirai (Tamil ) Puthandu Rasi Palangal in Tamil

 

மேசம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

 

Chithirai puthandu rasi palan in tamil - Bharatmoms.comசெவ்வாயே உங்கள் ஆட்சி நாயகனாக கொண்ட உங்களுக்கு, முக்கிய கிரகம் எதுவுமே சாதகமாக அமையவில்லை. அதனால், எதிலும் எச்சரிக்கையுடன் இருப்பது நன்மையளிக்கும். ஆண்டுதொடக்கம் சுமாராக இருந்தாலும், நாட்கள்போகப் போக நன்மை அதிகரிக்கும். முக்கிய கிரகமான குருபகவான் 3-ம் இடமான மிதுனத்தில்இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. குருசாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வை பலன் நன்மை தரும். ஜூன் 13-ந் தேதி குருமிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார்.அங்கும் அவரால் நன்மை தர இயலாது.ராகு தற்போது 7-ம் இடமான துலாமில்இருக்கிறார். இதனால் வீட்டில் சில சிரமம் உருவாகும். ஆனால் ஜூன்21ல் ராகு துலாமில் இருந்து கன்னிற்கு மாறுகிறார். அவரால் நன்மை கிடைக்க ஆரம்பிக்கும். குடும்பத்தில் நிலவிய குழப்பம் தீரும். முயற்சியில் இருந்து வந்த தடை அனைத்தும் விலகும்.கேது உங்கள் ராசியிலேயே இருப்பதால்எதிரி தொல்லை ஏற்பட்டுக் கொண்டிருக்கும். அவர் ஜூன் 21ல் மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுகிறார்.இதுவும் சிறப்பானதல்ல.சனி உங்கள் ராசிக்கு 7-ம் இடமானதுலாமில் உள்ளார். பொதுவாக இங்கு இருக்கும் போது சனி குடும்பத்தில் பல பிரச்னையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும். ஆனால், தற்போது சனி வக்கிரமாக உள்ளதால் கெடுபலன் நேராது. மாறாக, நன்மை ஓரளவு கிடைக்கும். டிச. 16ல் சனி துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அஷ்டமத்தில் சனி பெயர்வதால், முயற்சியில் பல்வேறு தடை உருவாகும். பணப்புழக்கம் இருக்கும். அதே நேரம் செலவும் அதிகரிக்கும். சிக்கனம் தேவை.குருவின் பார்வையால் பொருளாதாரம் சீராகும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வீடு, மனை வாங்கலாம். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமணம் போன்ற சுபங்கள்கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர். ஜூலை மாதம் முதல் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிதடை படலாம். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் இல்லை. உறவினர் வகையில்தொடர்ந்து அனுகூலம் இருக்காது.

 

 

ரிஷபம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 chithirai puhandu rasi palan in tamil - Bharatmoms.comதற்போது ராகு 6-ம் இடத்தில் இருப்பதால்பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருக்கிறார். செயல்பாடுகளில் வெற்றி தந்து உங்கள் திறமையை வளர்ப்பார். ஜூன்21ல், இவர் கன்னி ராசிக்குசெல்கிறார். 5-ம் இடமான அங்கு அவரால்நன்மை தர இயலாது. அவரால் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகள் உருவாகலாம்.கேது உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருப்பதால், உடல் நலத்தில் சிற்சில உபாதைகளை தரலாம். ஆனால் ஜூன் 21ல், அவர் 11-ம் இடமானமீனத்திற்கு செல்கிறார். அங்கு பல்வேறுநன்மைகளைத் தருவார். ஆன்மிக சுற்றுலா சென்று வர வாய்ப்புண்டு. பணவசதி நன்றாக இருக்கும். தோஷங்கள் நீங்கி நல்வாழ்க்கை நடத்துவதற்குரிய சந்தர்ப்பங்கள் தேடி வரும். நன்மையானகாலகட்டமாக அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். புத்திரர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குவர்.சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமானதுலாமில் இருந்து, உங்களுக்கு எண்ணற்ற பலநன்மைகளை செய்து கொண்டு இருக்கிறார்.குறிப்பாக முயற்சிகளில் வெற்றியை தருவார். பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள். உங்கள் ஆற்றல் மேம்பட்டு இருக்கும். குடும்பத்தில் உங்களை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருப்பார்கள். டிசம்பர் 16ல், இவர் துலாமில் இருந்துவிருச்சிகத்திற்கு மாறுகிறார்.இது சிறப்பான இடம் அல்ல. அதாவது அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளை உருவாக்குவார். பொறுமை தேவை.

 

 

மிதுனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 tamil new year rasi palan in tamil - bharatmoms.comமதிநுட்பத்துடன் செயலாற்றி வருவீர்கள்.தற்போது 5-ம் இடத்தில் இருக்கும் ராகுவால்குடும்பத்தில் பிரச்னை உருவாகலாம். ஆனால்,குருவின் பார்வை அவர் மீது விழுவதால் கெடுபலன் பெரும்பங்கு குறையும். ஜூன்21ல் ராகு துலாமில் இருந்து கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம்அல்ல.கேது 11-ம் இடமான மேஷத்தில் இருப்பதால், நல்ல பொருளாதார வளமும், ஆரோக்கியமும்உண்டாகும். எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலை வழங்குவார். ஜூன்21ல்கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்கு மாறுகிறார்.அப்போது நன்மை குறையத் தொடங்கும்.சனி பகவான் 5-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். அவரால் முயற்சியில் தடை, எதிரி தொல்லை, இடையூறு உருவாகும். தற்போதுசனிபகவான் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. டிசம்பர் 16ல்இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். சனி பெயர்ச்சிக்குப் பின், கையில் பணம் புழங்கும். எடுத்த செயலில் வெற்றி உண்டாகும். ஆற்றல்மேம்படும். சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் தொழிலில்நல்ல முன்னேற்றம் ஏற்படும். எந்த தொய்வும்இல்லாமல் தொடர்ந்து சிறப்பானமுன்னேற்றத்தைக் காணலாம். குடும்பத்தில் வசதி அதிகரிக்கும்.சமூகத்தில் உங்கள் செல்வாக்குமேம்படும். அக்கம்பக்கத்தினரின் பாராட்டு கிடைக்கும்.தம்பதியினர் இடையேகருத்துவேறுபாடு நீங்கிஅன்யோன்யம் அதிகரிக்கும். பல ஆண்டுகளாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சி ஜூன் 13க்கு பிறகு கைகூடும்.அதுவும் நல்ல வரனாகஅமையும். குழந்தை பாக்கியம் ஏற்படும். புதிய வீடு கட்டலாம். அல்லது தற்போதுள்ளவீட்டை விட அதிக வசதிமிகுந்த வீட்டிற்கு குடிபுகலாம். உறவினர்கள்வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம்.

 

 

கடகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 chithirai puthandu rasi palan in tamil - bharatmoms.comஉங்கள் கையில் எவ்வளவு பணம் வந்தாலும் செலவாகி விடும் . பிறரின் அன்பான பேச்சுக்கு அடிபணிவீர்கள். இந்த ஆண்டில் முக்கிய கிரகமான குரு பகவான் 12-ம் இடமான மிதுனத்தில் இருக்கிறார். இது சிறப்பானதல்ல. ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து உங்கள் ராசிக்கு பெயர்ச்சியாகிறார். அவரால் வீண் விரோதம் வரலாம். மந்த நிலை ஏற்படலாம். ஆனால்,குருவின் பார்வை பலத்தால் நன்மை கிடைக்கும். 5-ம் பார்வையால் குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பொருளாதார வளம் அதிகரிக்கும். பெண்களால் மேன்மை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 7-ம்பார்வையால் செல்வாக்கு அதிகரிக்கும். தேவை பூர்த்தியாகும். வாழ்வில் சுபயோகம் உண்டாகும். சுப நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறும். 9ம் பார்வையால் உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தைவெற்றிகரமாக செய்து முடிக்கலாம். பணப்புழக்கம் அதிகரிக்கும். ராகு 4-ம் இடமான துலாமில் இருப்பதால் நன்மை தர இயலாது. ஜூன்21ல் ராகு துலாமில் இருந்துகன்னிக்கு மாறுகிறார். 3-ம் இடம் என்பதால் அவரால், காரியவெற்றி, பொருளாதார வளம், குடும்ப மகிழ்ச்சி, தொழில் விருத்தி உண்டாகும். கேது 10-ம் இடமான மேஷத்தில் இருப்பதால்உடல் உபாதை உருவாகும். ஜூன்21 கேது மேஷத்தில் இருந்து மீனத்திற்குமாறுவதால் நன்மை பல தருவார். சனிபகவான் 4-ம் இடமான துலாமில் உள்ளார். இது சிறப்பான நிலை அல்ல. தற்போது அவர் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் சிறப்பாக இயங்க முடியாது. அதனால் கெடுபலன் உண்டாகாது.மாறாக நன்மையே நடக்கும். டிசம்பர் 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு மாறுகிறார். அவர்திருப்தியற்ற நிலையில்இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வை சிறப்பாக உள்ளது. இதனால் பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள்  உறுதுணையாக செயல்படுவர்.பொருளாதார வளம் கடந்த காலத்தைவிட சற்றுஅதிகரிக்கும். ஆனால்அதற்கு சற்று முயற்சி எடுக்கவேண்டியதிருக்கும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். ஜூன் 21 முதல் சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.  கணவன், மனைவி இடையே அன்பு நீடிக்கும். ஆனாலும் அவ்வப்போது கருத்து வேறுபாடு உண்டாவதை தவிர்க்க முடியாது. வீடு, மனை வாங்கும் முயற்சி தள்ளிப் போகலாம். ஜூன் முதல் தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும்.

 

 

சிம்மம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 chithirai puthandu rasi palan in tamil - bharatmoms.comவாழ்க்கையில் எப்பொழுதும் பிரகாசமாகவே காணப்படுவீர்கள். ஆண்டின் தொடக்கத்தில்குருபகவான் மிதுன ராசியில் உள்ளார். அவரால் பொருளாதார வளம் மேம்படும். ஆண்டு முழுதும் மனம் போல ஆடம்பர வாழ்வு வாழ்வீர்கள். தொழில், உத்தியோகம் சிறப்படையும். ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு பெயர்ச்சிஆவதால், நன்மை குறையும். உடல் அலைச்சலும், மனதில் உளைச்சலும் உருவாகலாம்.ராகு சனி பகவானோடு இணைந்து நன்மை தந்து கொண்டிருக்கிறார். இதனால், ஜூன் 21 வரை நன்மை நீடிக்கும். அதன்பின் அவர் கன்னி ராசிக்குபெயர்ச்சியாவதால், பொருளாதார இழப்பும் உண்டாகலாம்.  கேது ஆண்டு தொடக்கத்தில்மேஷத்தில் உள்ளதால் முயற்சியில் தோல்வியைஏற்படுத்தலாம். ஜூன்21ல் கேது மீனத்திற்குசெல்கிறார். அதன்பின் அவரால் வந்த தடை நீங்கும்.சனிபகவான் தற்போது 3-ம் இடமான துலாமில் உள்ளார். அவர் பொருளாதார வளம், குடும்பத்தில் மகிழ்ச்சி, தொழில் விருத்தியை தந்து கொண்டுஇருக்கிறார். டிசம்பர் 16ல் சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது அவ்வளவு சிறப்பானதல்ல. குடும்பத்தில் வீண் விரோதம் வளரும். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகலாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பானஇடத்தில் விழுகிறது. இது மிகசாதகமான நிலையே. மேலும் தற்போது சனிபகவான் வக்கிரத்தில் இருக்கிறார். கெடுபலன் தரும்நிலையில் ஒரு கிரகம் வக்கிரம் அடைந்தால் நன்மையே உண்டாகும்.குடும்பத்தில் ஜூன்13க்கு பிறகு தம்பதியர் இடையே கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஆனால் அதற்காக கடன் வாங்க நேரிடலாம். ஜூன் முதல் வீட்டில் செலவு அதிகரிக்கும். ஆடம்பர செலவைத் தவிர்ப்பது நன்மை தரும். சுபவிஷயத்தில்தாமதம் உண்டாகலாம்.

 

கன்னி தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 chithirai tamil puthandu rasi palan in tamil - Bharatmoms.comஉங்களின் மென்மையான போக்கால்அனைவரையும் கவருவீர்கள். பசுமை நிறைந்தஉங்கள் வாழ்வில், கடந்த சில ஆண்டுகளாக எண்ணற்ற கஷ்டத்தை அனுபவித்து வந்தீர்கள். அதற்கு காரணம் முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகம் இல்லாமல் இருப்பதே. இந்த ஆண்டு பிற்பகுதியில் நன்மை வரத் தொடங்கும்.ஆண்டின் தொடக்கத்தில் குரு பகவான் மிதுன ராசியில் இருக்கிறார். அவரால் பொருள் நஷ்டம், மன சஞ்சலம் ஏற்படலாம். ஜூன்13ல் குருபகவான் மிதுனத்தில் இருந்து லாபஸ்தானமான கடகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். இதனால், பொருளாதார வளம் மேம்படும். உத்தியோகம் சிறக்கும். புதிய பதவி கிடைக்க யோகமுண்டு.நிழல் கிரகமான ராகு தற்போது சனிபகவானோடு 2-ம் இடத்தில் இணைந்திருக்கிறார். இதனால் அவரால் நன்மை தர முடியாது. ஆனால் குருபகவானின் பார்வை அவர்கள் மீது விழுவதால் கெடுபலன்உண்டாகாது. ஜூன்21ல் ராகு உங்கள் ராசிக்குவருகிறார். அதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இதனால், உடல் உபாதையும், உறவினர் வகையில் மனக்கசப்பும் ஏற்படலாம்.கேது தற்போது 8-ம் இடமான மேஷத்தில்இருக்கிறார். இதுவும் நல்லதல்ல. உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற தொந்தரவு அடிக்கடி வரலாம். ஜூன் 21ல் கேது 7-ம் இடத்திற்கு வருகிறார். அங்கும் அவரால் நன்மை கிடைக்காது. அலைச்சல் அதிகரிக்கும். மனவேதனை உண்டாகும். மனைவி வகையில் பிரச்னை வரலாம். அதேநேரம் குருவின் பார்வை கேது மீது விழுவதால் கெடுபலன் குறையும்.சனிபகவான் 2-ம் இடமான துலாமில் உள்ளார். அவர் குடும்பத்தில் பிரச்னை ஏற்படுத்துவார். பொருள் களவுபோக நேரிடும். பொருளாதார இழப்பு உண்டாகும். தற்போது சனிபகவான் வக்கிரத்தில் சிக்கி இருப்பதால் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. வக்கிரநிலையிலும், அதே துலாம் ராசியிலேயே இருப்பதால் கெடுபலன் நடக்காது. டிச. 16ல் சனிபகவான் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு இடப்பெயர்ச்சியாகிறார். இது சிறப்பான வகையில் நன்மை வாழ்வில் ஏற்படும். முயற்சி அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளம் மேம்படும். தொழிலில் சிறந்தோங்கச் செய்வார்.

 

துலாம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 chithirai puthandu rasi palan in tamil - bharatmoms.comநீங்கள் கலை ஆர்வம் மிக்கவர்களாகஇருப்பீர்கள். நீதி, நேர்மை எப்பக்கம் இருக்கிறதோ அப்பக்கம் சாய விரும்புவீர்கள். உங்கள் நட்புகிரகங்களான செவ்வாய், கேது ஆகியோர் சாதகமற்ற சூழ்நிலையில் இருக்க, இந்த புத்தாண்டுபிறக்கிறது. ஆனால், ஜூலை முதல் சுப மங்களமாக இருக்கும். இந்த ஜய வருடத்தில் உங்கள் ராசிக்குதற்போது 9-ம் இடமான மிதுனத்தில் குரு உள்ளார். அவர் குடும்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களை தந்து மகிழ்ச்சி அடையவைப்பார். ஜூன்13ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 10ம் இடமான அங்கு அவர் பொருள் நஷ்டத்தையும், மன சஞ்சலத்தையும் ஏற்படுத்தலாம். சவால்களை சமாளிக்க வேண்டியிருக்கும்.ராகு தற்போது சனிபகவானோடு இணைந்து உங்கள் ராசியில் இருக்கிறார். அவர் உடல் உபாதையையும், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பையும் தரலாம். ஆனால், அவர்கள் மீது குருபகவானின் பார்வை விழுவதால் பெரிய அளவு கெடு பலனை தரமாட்டார்கள். ஜூன்21ல், ராகு 12-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அதனால்வெளியூர் பயணம் ஏற்படலாம். கேது தற்போது 7-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். அவரால் அலைச்சல், மனவேதனை, மனைவி வகையில் தொல்லை வரலாம். ஜூன்21ல், அவர் மீனத்திற்கு சென்று நன்மை தருவார். பொருளாதார வளம் அதிகரிக்கும். பகைவர்களின் தொல்லையில் இருந்து விடுபடலாம். அபார ஆற்றல் பிறக்கும்.சனிபகவான் உங்கள் ராசியில் இருக்கிறார்.இது ஏழரை சனியின் உச்Œகட்ட காலம்தான். இதனால் உடல் உபாதைகள், உறவினர் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். ஆனால், தற்போது அவர்வக்கிரத்தில் இருக்கிறார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற நிலையில் இருக்கும் அவரால்சிறப்பாக செயல்பட முடியாதது உங்களுக்கு சாதகமான பலனையே தரும். சனிபகவான் தான்நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்தவகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. டிசம்பர் 16ல், சனிபகவான் விருச்சிகத்திற்கு மாறுகிறார். சனி 2-ம்இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்னைகளைஉருவாக்குவார். பொருளாதார இழப்பு ஏற்படும். ஆனால், சனிபகவானின் 10-ம் இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் சில நற்பலன்கள் கிடைக்கும்.எந்தச் செயலையும் வெற்றிகரமாக நிறைவேற்றலாம். தடைகள் அகலும். பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். செலவுகளும் ஏற்படும். உங்கள் மீதான அவப்பெயர்மறையும். செல்வாக்கு மேலோங்கும். அக்கம்பக்கத்தினர் உங்களைப் புகழ்வர். ராகுவால் வரும் தடைகளை எளிதில் முறியடிக்கலாம்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஆண்டின் தொடக்கத்தில் கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். தம்பதியினரிடையே அன்பும், பாசமும் மேம்படும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். விருந்து, ஜூன்13 முதல் வீட்டில் சிற்சில பூசல்கள் வரலாம். விட்டுக் கொடுத்து போகவும். செப்டம்பர், நவம்பரில் வீடு, மனை வாங்க யோகம் உண்டு.

 

 

விருச்சிகம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 tamil new year rasi palan in tamil - bharatmoms.comவீரத்திற்கும், தீரத்திற்கும் சளைக்காதவர்கள்நீங்கள். எதிரிகளை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளும் வல்லமை படைத்தவர்கள். பரபரப்பும், சுறுசுறுப்பும் உங்கள் உடன்பிறப்பு. இந்த ஜயவருடத்தில், குரு பகவான் 8-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். இது சிறப்பானது அல்ல. அங்கு பொருள் விரயத்தையும், வீண்விரோதத்தையும் தரலாம். ஜூன்13ல், அவர்மிதுனத்தில் இருந்து 9ம் இடமான கடகத்திற்குமாறுகிறார். அப்போது, அவர் குடும்பத்தில்பல்வேறு முன்னேற்றங்களை தந்து மகிழ்ச்சி அடைய வைப்பார்.ராகு தற்போது சனிபகவானுடன்இணைந்திருக்கிறார். அவருடன் சேர்ந்துபிற்போக்கான பலனையே தருவார். ஆனால்,அவர் மீது  குருவின் பார்வை விழுவதால்கெடுபலன்களின் தாக்கம் இருக்காது. மேலும், ஜூன் 21ல், ராகு இடம்மாறி 11-ம் இடமானகன்னிக்கு செல்கிறார். அங்கு சென்ற பின்நன்மைகள் தருவார். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.கேது தற்போது 6-ம் இடத்தில் இருப்பது
உங்களுக்கு சிறப்பானது. அவரால் பொன்னும் பொருளும் தாராளமாக கிடைக்கும். காரியஅனுகூலம் ஏற்படும். ஜூன் 21ல் அவர் இடம்மாறி மீனத்திற்கு வருவார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு அவரால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். சனிபகவான் 12ம் இடமான துலாம்ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனி 12-ம்இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம்ஏற்படும். எதிரிகளின் இடையூறுஅவ்வப்போது வரலாம். இதனால்நீங்கள் அஞ்ச வேண்டாம். காரணம் இப்போது சனிபகவான் வக்கிர நிலையில் உள்ளார். வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது.சாதகமற்ற கிரகம் செயல்படமுடியாமல் போவது உங்களுக்கு சாதகம்தானே!. சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும், அவரது 7-ம் இடத்து பார்வை மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார்.பகைவர்களை எதிர்கொள்ளும்ஆற்றல் கிடைக்கும். டிசம்பர் 16ல், சனிபகவான்  துலாமில் இருந்து உங்கள் ராசிக்கு  மாறுகிறார். இது ஏழரை சனியின்  உச்கட்ட காலம். இதனால் உடல் உபாதைகள் வரலாம். உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு ஏற்படும். வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும்  ஜோதிடம் கூறுகிறது.
சனிபகவான் தான் நிற்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த வகையில் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது.

 

 

தனுசு தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 chithirai puthandu rasi palan in tamil- bharatmoms.comஇந்த ஆண்டு சீரான பலனை காணலாம். அதிக ஏற்றமும் இல்லாமல், தாழ்வும் இல்லாமல் இருக்கும். உங்கள் ஆட்சி நாயகனான குரு, உங்கள் ராசிக்கு7-ம் இடமான மிதுனத்தில் உள்ளார். இது சிறப்பான அம்சம். அங்கு அவரால் பல நன்மைகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். இது சிறப்பானது அல்ல. அங்கு பொருள் விரயத்தையும், வீண் விரோதத்தையும் தரலாம்.ராகு தற்போது 11ம் இடமான துலாமில்,சனிபகவானோடு இணைந்து இருக்கிறார். அவரோடு இவரும் சேர்ந்து நன்மை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாகஇருப்பர். ஜூன் 21ல், ராகு 10-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் அல்ல. அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில்தொல்லைகளையும் தரலாம். கேது தற்போது 5-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. இதனால் எதிரிகளின் தொல்லை வரலாம். உடல்நலம் லேசாகபாதிக்கப் படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவைப்படும். கேது ஜூன் 21-ந் தேதி கேது 4-ம் இடமான மீனத்திற்கு மாறுகிறார். இதன் மூலம்
தீயோர்  சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம். உடல் நலம் பாதிப்பு வரலாம்.பயணத்தின் போது சற்று கவனம் தேவை. சனிபகவான் தற்போது 11-ம்இடமான துலாமில் உள்ளார். இது சாதகமான இடம். பல்வேறுநன்மைகளைத் தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். தற்போது  சனிபகவான் வக்கிரம் அடைந்துள்ளார். இதனால் அவரால்  உங்களுக்கு சாதகமாக முழுமையாக செயல்பட முடியாமல் போகும். அதேநேரம், அவர் வக்கிரம் அடைந்தாலும் துலாம் ராசியில்தான் இருக்கிறார். இதனால் பாதக முடிவு அதிகம் இருக்காது. எனவே கவலை வேண்டாம். டிசம்பர் 16ல், இவர் துலாமில் இருந்து விருச்சிகத்திற்கு  மாறுகிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது.சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்புவரலாம். வெளியூர் பயணம்ஏற்படும். எதிரிகளின்இடையூறு அவ்வப்போதுவரலாம். அதற்காக, நீங்கள் அஞ்ச வேண்டாம்.காரணம், சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும்சனியின் 7-ம் இடத்து பார்வை மூலம் நல்ல பொருளாதார வளத்தைக் கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும். கணவன்- மனைவி இடையே அன்பும், பாசமும் நீடிக்கும். மனைவி வகையில் இருந்து வந்த ஊடல் மறையும். உறவினர்கள் வகையிலும் பிரச்னை அகன்றுஅன்யோன்யம் பிறக்கும். ஜூன் மாதத்திற்கு பிறகு வீட்டில் சில பிரச்னைகள் வரலாம். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படும்.திருமணம் போன்ற சுப காரியங்கள் தடைபடலாம்.

 

மகரம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

204 chithirai puthandu rasi palan in tamil - bharatmoms.comகடந்த சில ஆண்டுகளாக உங்கள் ஆட்சி நாயகன் சனி பகவான், பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தந்து கொண்டிருப்பார். குறிப்பாக, தொழிலில் சிறுசிறு பின்னடைவு, உங்கள் செல்வாக்கில் தளர்ச்சி உருவாக்கி இருப்பார். குரு, ராகு-கேது என முக்கிய கிரகங்கள் எதுவுமேசாதக மாக இல்லாததும் ஒரு காரணம். இந்த ஆண்டு பின்தங்கிய நிலையில் இருந்து விடுபட்டு முன்னேற்றத்திற்கு வழிவகை காண்பீர்கள்.ஜய ஆண்டின் தொடக்கத்தில், குரு 6-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். அங்கு அவரால் நன்மை தரமுடியாது. அவர் மனதில் தளர்ச்சியையும், உடல் உபாதைகளையும் தரலாம். ஜூன்13ல், குரு, மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 7-ம் இடமான அங்கு குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரித்து சுப நிகழ்ச்சியைத் தருவார். செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். பணியாளர்களுக்கு உயர்வு கிடைக்கும்.ராகு தற்போது 10-ம் இடமான துலாமில் சனிபகவானோடு இணைந்துள்ளார். அங்கு பொல்லாப்பையும், பெண்கள் வகையில் தொல்லைகளையும் தரலாம். ஆனால், குரு பார்வை படுவதால் அவரால் கெடுபலனை தர முடியாது. ஜூன் 21ல், ராகு 9-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அவரால் முயற்சிகளில் தடை,எதிரிகளின் இடையூறு வரலாம்.கேது தற்போது 4-ம் இடத்தில் இருந்துஉங்களை தீயோர் சேர்க்கைக்கு ஆளாக்கி தொல்லைகளை தரலாம். அவர் ஜூன்21ல் மீனத்திற்கு வருகிறார். இது சிறப்பான இடம். இறை அருளையும் காரிய அனுகூலத்தையும் தருவார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். சனி பகவான், உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருக்கிறார். துலாம் ராசியில் இருக்கும் அவரால், சிறப்பானபலனைத் தர இயலாது. அவரால் தொழிலில் சிறுசிறு பின்னடைவுஏற்படலாம். உடல் உபாதைகள் லேசாக நோகச் செய்யலாம். இதைக் கண்டு நீங்கள் அச்சம் கொள்ள வேண்டாம். காரணம் தற்போது அவர் வக்கிரம்அடைந்துள்ளார். பொதுவாக எந்த கிரகம் வக்கிரம் அடைந்தாலும் அவர்களால் பழைய பலனை தர இயலாது. அந்த வகையில் சனிபகவானால் உங்களுக்கு கெடு பலனை தர இயலாது. டிசம்பர் 16ல், இவர் விருச்சிகத்திற்கு மாறுகிறார். இது சாதகமான இடம். பல்வேறு நன்மைகளை தர உள்ளார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம்.வீட்டுக்கு தேவையான வசதிகள் கிடைக்கும்.கணவன்- மனைவி இடையே அன்பு மேம்படும். குழந்தை பாக்கியம் பெறுவீர்கள். ஜூன் 21க்கு பிறகு தடைபட்ட திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் வருகையும், அவர்களால் நன்மையும் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகம் தொடரும்.தொழில், வியாபாரம்: எதிரிகளின் தொல்லையை சாமர்த்தியமாக முறியடிப்பீர்கள். சனி வக்கிரமாகி இருப்பதால் சற்று முன்னெச்சரிக்கை வேண்டும். டிசம்பர் 16க்கு பிறகு முதல் அதிக வளர்ச்சி காணலாம். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் வந்து சேரும்.  வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். லாபம் அதிகரிக்கும். புதிய தொழில் வெற்றி அடையும். அரசு வகையில் உதவி கிடைக்கும்.

 

 

கும்பம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 tamil puthandu rasi palan in tamil - bharatmoms.comகுரு-கேதுவால், இந்த ஆண்டு தொடக்கம்உங்களுக்கு பிரகாசமாக அமையும். குருபகவான் தற்போது 5-ம் இடமான மிதுன ராசியில் இருக்கிறார். அங்கு பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார். ஜூன்13ல், அவர் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 6-ம் இடமான அங்கு அவர் மனதில் தளர்ச்சியையும், உடல் உபாதைகளையும் தரலாம். செலவு அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு,மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.ராகு தற்போது 9-ம் இடமான துலாமில் சனிபகவானோடு உள்ளார். அவரால் முயற்சிகளில் தடை, எதிரிகளின் இடையூறு போன்றவை இருக்கும். ஜூன்21ல் இவர் 8-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அங்கு முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பை ஏற்படுத்தலாம். கேது தற்போது 3-ம் இடமான மேஷத்தில் இருந்து இறை அருளையும், காரிய அனுகூலத்தை யும் கொடுத்து கொண்டிருக்கிறார். அவர் ஜூன்21ல் இடம் பெயர்ந்து மீனத்திற்கு வருகிறார். இதனால் பொருள் களவு ஏற்பட வாய்ப்புண்டு. பகைவர் வகையில் தொல்லை வரும்.சனி பகவான் 9-ம் இடமான துலாம் ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்றுசொல்ல முடியாது. இங்கு அவர் இருக்கும்போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடையூறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். இந்த கெடுபலன்களை கண்டு அஞ்ச வேண்டாம். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். அவர் தான் இருக்கும் இடத்தில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார். அந்த மூன்று பார்வைகளும் உங்களுக்கு சிறப்பாக உள்ளது. டிசம்பர் 16ல், அவர் துலாமில் இருந்துவிருச்சிகத்திற்கு மாறுகிறார். 10-ம் இடமான அங்கு அவரால் சிறப்பான பலனை தர இயலாது. தொழிலில் சிறுசிறு பின்னடைவுகள் ஏற்படலாம். உங்கள் செல்வாக்கு முன்பு போல் இல்லாமல் போகலாம். உடல் உபாதைகள் லேசாகநோகச் செய்யலாம்.ஆண்டின் தொடக்க காலத்தில் மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பும் நிலவும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சி நடக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வீட்டுக்கு தேவையான சகல வசதிகளையும் பெறுவீர்கள். சிலர் முயற்சி எடுத்து வீடு, மனை வாங்கலாம். ஜூனுக்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம்.தொழில், வியாபாரம்: ஜூன் வரை தொழில்,வியாபாரத்தில் தடையில்லா வளர்ச்சி இருக்கும். லாபத்துக்கு குறை இருக்காது. அரசிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்க வாய்ப்பு உண்டு. குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம். ஜூலை முதல் லாபம் பெற அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். பணவிரயம் ஆகலாம். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபாரம் வேண்டாம். போட்டியாளர்களின் இடையூறு தலைதூக்கலாம்.

 

 

மீனம் தமிழ் புத்தாண்டு ராசிபலன்! (14.4.2014 முதல் 13.4.2015 வரை)

2014 chithirai puthandu rasi palan in tamil - bharatmoms.comஇந்த ஆண்டு பிற்பகுதியில் கூடுதல் பலனை எதிர்பார்க்கலாம். குருபகவான் ஆண்டின் தொடக்கத்தில் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும், அவர் உங்கள் ராசி நாயகன் என்பதால் அதிக கெடுபலன்கள் நடக்காது. தற்போது குரு 4-ம் இடமான மிதுன ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் என்று சொல்லமுடியாது. மன உளைச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்கலாம். ஜூன்13ல், குரு பகவான் மிதுனத்தில் இருந்து கடகத்திற்கு மாறுகிறார். 5-ம் இடமான அங்கு அவர் நன்மை தருவார். பொருளாதார வளத்தையும், சுபங்களையும் தருவார்.நிழல் கிரகமான ராகு 8-ம் இடத்தில் சனிபகவானோடு இணைந்துள்ளார். அவர் தடைகளையும், உறவினர்கள் வகையில் மனக்கசப்பையும் ஏற்படுத்துவார். ஜூன்21ல், ராகு 7-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். அப்போது, அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்னைகளைஉருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும்.வெளியூர் வாசம் நிகழும்.கேது 2-ம் இடமான மேஷத்தில் உள்ளார்.அங்கு பொருள் விரயத்தையும், பகைவர் வகையில் தொல்லையையும் தந்து கொண்டிருக்கிறார். ஜூன்21ல்இடம் பெயர்ந்து, உங்கள் ராசிக்குவருகிறார். உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம். பகைவர்களின் தொல்லை