450 Years famous kalkasthi temple gopuram disaster  ,I found this news from daily thanthi and dinakaran but this information not published in any other online news site i dont know why ? Really it is very hot news now a days many temples are damaged because of improper maintance this is one example ..

காளஹஸ்தி சிவன் கோயில் ராஜகோபுரம் நேற்றிரவு 8 மணியளவில் முழுவதுமாக அடியோடு இடிந்து விழுந்து தரைமட்டமானது.  இதனை நேரில் பார்த்த பக்தர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.
இடிபாட்டில் பக்தர்கள் யாரும் சிக்கி உள்ளார்களா? என உடனடியாக தெரியவில்லை.
பஞ்ச பூத சிவத் தலங்களில் வாயு தலமாக விளங்குவது ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில். திருப்பதியில் இருந்து 38 கிலோ மீட்டர் தூரத்தில்  உள்ள இக்கோயிலில் ராகு, கேது தோஷ நிவர்த்திக்கான பரிகார பூஜைகள் செய்யப்படுவதால் நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கில்  பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்த கோயிலின் ராஜ கோபுரம் 140 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளித்துவந்தது. கி.பி. 1510ம் ஆண்டு கிருஷ்ண தேவராய மன்னர்  போரில் வெற்றி பெற்றதன் நினைவாக இந்த பிரம்மாண்ட ராஜகோபுரத்தை கட்டியதாக வரலாற்று சுவடுகள் தெரிவிக்கின்றன.
விரிசல் எப்போது:  இந்த ராஜகோபுரத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் லேசான விரிசல் ஏற்பட்டது. ஆனால், அப்போது இதை யாரும்  கண்டு கொள்ளவில்லை. அவ்வப்போது சிறிய கற்கள் கீழே விழுந்தன. தற்போது திடீரென ராஜகோபுரத்தின் மேல் முதல் நிலையிலிருந்து  ஆறாம் நிலை வரை கோபுரத்தின் இடதுபுறம் இரண்டாக விரிசல் ஏற்பட்டு பிளவுபட்டது போல் காணப்பட்டது.
மின்னல் வெட்டு போல் காணப்பட்ட இந்த இடத்திலிருந்து செங்கற்கள், சுண்ணாம்பு கற்கள் விழுந்த வண்ணம் இருந்தன. இதை கண்ட  தேவஸ்தானத்தினர் உடனடியாக சென்னையிலிருந்து தொல்பொருள் ஆராய்ச்சி நிபுணர் குழுவினரை நேற்றுமுன்தினம் வரவழைத்தனர்.
சென்னை ஐஐடி பேராசிரியர் நரசிம்மன், புவியியல் நிபுணர் ராம் மோகன் ஆகியோர் தலைமையில் 5 பேர் கொண்ட நிபுணர் குழு இதனை  ஆய்வு செய்தது.
உடனடியாக  ராஜகோபுர பகுதியை அபாயகரமான இடமாக அறிவிக்க கோரியும், கோபுரத்தை சுற்றி 150 அடி முதல் 200 அடி வரை  யாரையும் உள்ளே அனுமதிக்கக்கூடாது என்றும், வீடு மற்றும் கடைகளை உடனடியாக காலி செய்யும்படி இக்குழு காளஹஸ்தி தேவஸ்தானத் திற்கு கேட்டுக்கொண்டது.

நேற்றிரவு சரியாக 8 மணியளவில் திடீரென ராஜகோபுரம் கம்பீரமாக நின்ற நிலையிலேயே அப்படியே அடியோடு தரையோடு தரையாக சரிந்து  விழுந்தது. இதைக்கண்ட பக்தர்கள் நாலாபுறமும் பயத்தில் அலறியடித்து அங்கும் இங்கும் ஓடினர். ஒரே பரபரப்பாக காட்சியளித்தது.
நகரம் முழுவதும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. காளஹஸ்தி நகரமே இருளில் மூழ்கியது.

சுவர்ணமுகி நதிக்கரையில் கடந்த 450 ஆண்டுகளாக கம்பீரமாக காட்சியளித்த பிரசித்தி பெற்ற காளஹஸ்தி ராஜகோபுரம் நொடி பொழுதில்  இடிந்து தரைமட்டமானதை அறிந்து நாடு முழுவதும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்

 

Share your opinion about this news?